top of page
  • Whatsapp
  • Instagram
  • Facebook
  • YouTube
1733477125897_8huiby_2_0_edited.jpg

மகான்
திரு சிவஞான நடராஜ சுவாமிகள்

IMG_20241203_183213_960_edited.jpg

மகான்
திரு இறைமுடிமணி ஐயா

தமிழ் சித்தயோக ஆராய்ச்சி மையம் எனும் இந்த அறிவுக்கூடம் வேலூரில் திரு.தர்மலிங்கம், உடனமர் திருமதி. இராஜாமணி அவர்களின் மூத்த மகவாக அவதரித்த திரு. இறைமுடிமணி எனும் மகானின் ஆன்ற அனுபவ அறிவும் அதன் பயனும் அவரை பின் தொடர்ந்து அக்கல்வியை பொதுமக்களுக்கு எடுத்து செல்லும் முயற்சி. 1958 ஆம் ஆண்டு அவதரித்த அன்னார் தமது பள்ளிக்கல்வி முடிந்தவுடன் வடசென்னையில் அசோக் லேலாண்ட் எனும் ஆலையில் பணியாற்றி வந்தார். அவர் தமது 25வது அகவையில் பொருதி பொருத்தாள் திருமதி ஞானம் எனும் அம்மையை வாழ்க்கை துணையாக கொன்டார். அவர் தமது 27வது அகவையில் சூலைநோயால் பாதிக்கபட்டார். மருத்துவ உதவி பயனளிக்காதமையால் திரு.இராமன் எனும் சக நண்பர் உதவியால் சென்னையில் அகரத்தில் அமைந்துள்ள திருமயிலை சிவஞான நடராஜ சுவாமிகள் ஆசிரமத்திற்கு தியான பயிற்சி மூலம் தீர்வுகாண சென்றார். 

அன்றுமுதல் அவருடைய ஞானத்தேடல் ஆரம்பித்தது. அவருக்கு சித்தயோகப் மௌன பயிற்சியின் போது 1987-ம்ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந்தேதி சிவஞான நடராஜ சுவாமிகள் "மோட்ச சமாதி" சிவபதம் அடைந்தார். தாயை இழந்த கன்றினை போல் மௌனத்தை கலைக்க முடியாமல் அல்லலுற்றார். மானசீக குருவாக சிவஞான நடராஜ சுவாமிகள், அவரின் குருவான கலைமணி யோகானந்தர் சுவாமிகள் மற்றும் திரு.ரங்கநாதன் அவர்களால் தனது பயிற்சியை நிறைவு செய்தார். பயிற்சி நிறைவுற்றாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டார். ஆத்ம-சக்தியை பூரணமாக பெற்றார். தமது மந்திர உச்சாடனத்தில் தந்தையார் உபதேசித்த முறைமையால் தமது பயிற்சியின் பூரணத்தால் பெரியோர்களுக்கு ஆத்ம-விடுதலையும் சீடர்களுக்கு பூரண சுதந்தரத்தையும் அருளினார். "இல்லறம் அல்லது நல்லறம் அன்று" எனும் ஔவை கூற்றின் படி தமது தந்தையை போல, தமது குருவினை போல ஒரு இல்லறத்தான் பூரண வித்தாகி ஆத்மஞானம் பெற எடுத்துக்காட்டாக விளங்கினார்.  

தமது தோழர் திரு.லாவன்யன் வற்புறுத்துதலுக்கு இணங்க இந்த சித்தர் கல்வியை உபதேசிக்கவும் வழிநடத்தவும் ஒப்புக்கொண்டார். அது மென்மேலும் வளர்ந்து திரு.பாபு, நடராஜன், சீனிவாசன் என நட்பு வட்டாரத்தில் மலர தொடங்கி, கோவையில் மருத்துவ குழுவாகவும், திருச்சி, ஆவடி, திருமயிலை, திருவண்ணாமலை, கனடா, அமேரிக்கா, ஆஸ்திரேலியா என பெருகியது. இந்த அறிவுக்கூடம் தனது உறுப்பினர்களுக்கு மகானின் வரையறுக்கப்பட்ட பயிற்சி முறைகளை பயிற்றுவித்து அதை மென்மேலும் அகத்தாராய்ந்து இறைபாதையினை கற்று, வெற்றி கொள்ள வாழ்த்துகிறது.

man-fantasy-setting-practicing-yoga-mindful-meditation.jpg

©2024 by Tamil Siddha Yoga Research Centre

bottom of page