தமிழ் சித்த யோகப்பயிற்சி


"சித்த யோகம்" என்பது இரண்டு சொற்களின் கலவையாகும். 'சித்தா' என்றால் ‘பூரணப்படுத்தப்பட்ட' அல்லது 'அதிகாரம் பெற்ற' மற்றும் 'யோகம்' என்றால் 'பரம்பொருளுடன் ஒன்றிணைதல்' என்று பொருள். சித்த யோகம் என்பது ஒரு சக்திவாய்ந்த ஆன்மீக குருவின் கிருபையால் இறை உணர்வுடன் சிரமமின்றி
ஒன்றுபடக்கூடிய ஒரு வழியாகும்.
அன்பிற்குரிய ஆத்மஞான சாதகர்களுக்கு, உளம் கனிந்த வாழ்த்துக்கள்!
தமிழ் சித்த யோகா ஆராய்ச்சி மையம் எனும் இந்த சித்த ஞான கல்வி நிலையத்தை பற்றி தெய்வசிகாமணியாகிய யாம் உங்களுடன் கலந்து உரையாடுவதில் மெத்த மகிழ்ச்சி அடைகிறோம். ஆன்மிகச் சிந்தனைகள், ஆன்மிக நல்வாழ்வு மற்றும் ஆன்மிக சாதனை ஆகியவற்றில் நாட்டம் கொண்டவர்களின் நலன்களுக்காக யாம் தொடங்கும் ஒரு அமைப்பு இது. எமது வாழ்நாள் முழுவதும் இந்த தமிழ் சித்த யோகா கல்வியின் முழுமையை ஆழத்தைப் புரிந்து அனுபவித்து உங்களுக்கு பகிர்வதில் எமை ஒரு ஆராச்சியாளராகவே தாங்கள் எடுத்து கொள்ளலாம்.
பலவகையான யோகா அஷ்டாங்க யோகா சித்த யோகா, காய சித்தி போறவை உள்ளன. ஆனால் இங்கு யாம் தமிழ் சித்த யோகாவை வடிவமைத்துள்ளோம். இது மூன்று வகையான பயிற்சி செயல் முறைகளை உள்ளடக்கியது.
முதல் நிலை பயிற்சி உணர்வு அதாவது தொடுதல் புலம் (ஸ்பர்ஷ்).
இரண்டாவது நிலை பயிற்சியானது சுவாசம் ஆகும், இதில் உள் சுவாசம் மற்றும் அதன் கட்டுப்பாட்டை உள்ளடக்கியது.
மூன்றாவது நிலை மந்திரத்தில் உள்ளது.
இந்த மூன்று சூத்திரங்கள் அனைத்தும் வரிசைப்படுத்தப்பட்டு, ஒரு சாதகன் தன் சுயத்தை தன்னில் அதனை உணர்ந்து அதுவே சர்வ-வல்லமை பொருந்திய நீக்கமற நிறைந்திருக்கும் பேருண்மை என்பதையும் ஆராய்ந்துணர வடிவமைக்கபட்டுள்ளது.
முழு செயல்முறையும் வழக்கமாக 1-3 மாதங்கள் அடக்கமாக ஒரு அமர்வு இயங்கும். மேலும் 48 அமர்வுகளின் முழு அட்டவணைகளும் 8 முதல் 10 ஆண்டுகள் வரை முழு செயல் முறை வடிவாக முடித்து தரப்படும்.
ஒருவரின் தன்னம்பிக்கையும் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மெய்யுணர்வும் சார்ந்தடக்கி வழிமுறை விவரித்து முடிக்கப்படும். மேலும் 48 நாட்கள் ஒரு மண்டலம் மௌனம் மூலம், சித்தஞான அனுபவங்கள், மேல்நிலை பயிற்சி செயல்படும்.
இந்த பயிற்சி செயல்முறை உங்கள் நல்வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும் மற்றும் இறுதியில் உங்கள் வாழ்க்கை செயல்முறையின் ஒரு பகுதியாக மாறும். இதைப் பின் தொடர்பவர்கள் தங்கள் அனுபவத்தை, ஆன்மீக சாதனைகளை, வாழ்க்கை உள்நோக்கம் மற்றும் ஆன்மபலம், பற்றி வெளிப்படுத்தியுள்ளனர்.
எமைபோல் இந்த சித்தஞான கல்வியில் ஒவ்வொருவரும் தமை ஈடுபடுத்திக் கொண்டு அனைத்துலகுக்கும் ஆதாரமாக விளங்கும் பூரணத்துவத்தை தம்மில் மற்றும் அனைத்துயிரிலும் ஆராய்ந்துணர வாழ்த்துகிறோம்.