top of page
  • Whatsapp
  • Instagram
  • Facebook
  • YouTube
1 (2).png

மகான்
திரு இறைமுடிமணி ஐயா அவர்களின் அருளாசி

"சிவாயவசி"

குருவணக்கம்!

ஆதிகால சித்தர் முதல் தற்கால சித்த யோகிகள் உட்பட அனைவருக்கும் எமது வணக்கம்!

பரசிவம் சின்மயம் பூரணம், அதுதான் அது. மனமும் எண்ணமும் தொழில் நடத்திட இன்ப துன்பங்களால் அறிவிழந்து, நிலை தடுமாறிட புண்ணியவசத்தால் பிறந்தோம். பிறப்பு - இறப்பின் உண்மையை உணரத்தெறிந்து, ஆக்கமும் அழிவும் பகுத்துணர்ந்து, ஆக்கத்தின் வழி அமர்த்திய கலைமணி யோகானந்த அடிகள் வர்க்கத்தின் திருமயிலை சிவஞான நடராஜ சுவாமிகளின் சீடரான இறைமுடிமணி உணர்ந்து உபதேசித்த பொன்மொழிகள்!

   எமது பணி

பணி (Mission):

தமிழ் சித்த யோக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்.

நோக்கம் (Vision):

மெய்ஞானம் அடைதல்.

தரக் கொள்கை (Quality Policy):

மனம், மொழி, மெய்யினை செம்மையாக்கி சித்த யோக மெய்யுணர்வு அடைதல்.

எமது மையத்தின் கட்டமைப்பு:

தமிழ் சித்த யோக ஆராய்ச்சி மையம் என்பது மதம், இனம், மொழி, குலம் எல்லாம் கடந்த அனைத்து சமயங்கள் அடங்கிய கோட்பாடாகிய எம்மதமும் சம்மதம் எனும் நடைமுறை. (The Tamil Siddha Yoga Research Center is a practice of consent, a doctrine that encompasses everyone regardless of caste, language and religion.) பல்வேறு சித்த யோக பயிற்சி மையங்கள் இருப்பினும் ஒவ்வொரு சித்த புருசரின் அடிப்படை கேள்விகள் பிறவி பெரும் பயன் என்ன என்று அறிவது மற்றும் இறைவனை உயிருள்ள போதே உனர்ந்து அறிவதே.  அவ்விதம் அறியும் கால் பிறவாவரம் அல்லது இறவாவரம் வேண்டிப் பெறலாம்.

(Ultimate Question all sages place across GOD? I should neither die nor be born.)

பிறவாவரம்: எக்கால கட்டத்திலும் தாழ்ந்த நிலை ஐந்தறிவுள்ள சீவராசியாக பிறவாதிருக்க அருள வேண்டும் என.

இறவாவரம்: இறந்தாலும் சூட்சும சரீரம் பெற்று மீண்டும், மீண்டும் பிறந்து கொண்டே இருக்க வேண்டும்.

அவ்வாறு, முற்படுகையில் ஒரு சித்தர் கல்வி ஆராய்ச்சிமுறை தேவைப்படுகிறது. இவற்றில் தன்னை தான் அகமுக பயிற்சி மூலம் அறியவே இந்த மையம் செயல்படும்.

முறையியல்: சரியை, கிரியை, யோகம், ஞானம். 

 

சரியை:

கர்மாவை தூய்மையாக சரிவர செய்தல்.

 

கிரியை:

கோயில் என்னும் ஒரு வழிபாட்டு தலம், கடவுள், தெய்வம், வாகனம், பலிபீடம் என்றால் என்ன என்று தேடுதல்.

 

யோகம்:

இறை அனுபவம் பெற பல யோகிகளால் கூறப்பெற்ற ஒரு முறைப்படுத்தப்பட்ட வழிமுறை.

 

ஞானம்:

மேற்கூறிய வழிமுறைகளால் மனம், உடல், உயிர் அடைய பெரும் சித்தர் கல்வி எனும் தூய அனுபவங்கள்.

 

மேற்கூறியவற்றை ஔவையார் ஒரே வெண்பாவில் கூறியுள்ளார்.

ஒன்றாகக் காண்பதே காட்சி; புலன் ஐந்தும்

வென்றான் தன் வீரமே வீரமாம் - என்றானும்

சாவாமல் கற்பதே கல்வி; தனைப் பிறர்

ஏவாமல் உண்பதே ஊண்' – ஔவையார்

ஒன்றாக கான்பதுவே காட்சி எனின் அது சர்வ வல்லமை பொருந்திய சர்வேஸ்வரன்தான். அதுவே அருவமாக, உருவமாக மற்றும் அரு-உருவமாக வெளிப்படும். அதற்கு உண்டான ஆயத்தம் தூய்மையே. உடல்தூய்மை, மனத்தூய்மை, உயிர்த்தூய்மை எனும் மும்முடியாகும். மூன்றும் அடைந்தால் உள்ளத்தூய்மை நிறைவுபெறும். இதையே, திருமூலர் "உள்ளம் ஒரு கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்" என குறிப்பிட்டுள்ளார். உள்ளம் தூய்மையானால் அங்கே இறைவன் வாசம் செய்வான். இங்கே தூய்மையே வீரம். புலன் ஐந்தும் உள்ளத்தூய்மையால் தனைதான் வெல்வதே வீரம் அடக்கி ஆள்வதல்ல வீரம். "சாகாமல் கற்பதே கல்வி எனின் அது சித்தர்கல்வியே". சித்தர் கல்வியே சாகாக்கல்வி, அதுவே, சககல்வியும் கூட. அவ்வாறு நாம் இறைவனை அறிய முற்படுகையில் தொன்னூற்றாறு தத்துவம் உணர வேண்டும் அவையாவன,

தொன்னூற்றாறு தத்துவம்:

  1. நால் வேதம்,                                        :4

  2. ஆறு சாத்திரம்,                                  :6

  3. பதினென் புராணம்,                        :18

  4. முப்பத்திரண்டு மனோஞானம்  :32

  5. அறுபத்திநாலு கலைஞானம்..    :64

 

இருபத்தெட்டாகமம்:

நால் வேதம் 4,  ஆறு சாத்திரம் 6, பதினென்புராணம் 18

முப்பத்திரண்டு மனோஞானம்:

இருபத்தெட்டாகமத்துடன் நான்கு சக்தி (காலாசக்தி, மாயாசக்தி, இச்சாசக்தி, ஞானசக்தி) சேர்ந்து முப்பத்திரண்டானது.

அறுபத்தி நாலு கலை ஞானம்:

பதினாறு(கலை) ஸ்தானங்கள் தலையில் பத்து துவாரம், உடல் (கண்டத்தில்) ஆறு ஆதாரம். (10+6=16) இவற்றில் சுவாசம் ஏறி இறங்குவது.

சந்திரகலை – வலதுபக்கம் (16 கலை)

சூரியகலை - இடதுபக்கம் (16 கலை)

சுழுமுனை - இரண்டுபக்கமும் ஏறுவது (16 கலை)

இறங்கினால் (16 கலை).

மொத்தம்: 64 கலைஞானம்.

 

இதனை குருவழி நடத்துதல் மூலம் அறிந்தபின் ஒவ்வொருவரும் பெறும் இறை அனுபவங்கள் பலவாகும்.

சூட்சும சரீரம் பெற்று அதனை அனுதினமும் தூய்மையாக்கி, முறைப்படுத்தபட்ட பாதையில் வர, இறை பயணத்தில் நாம் அங்கமாகி, தாய் தந்தை மறவாது, மனைவி குழந்தை மறவாது பிறவாவரம் மற்றும் இறவாவரம் பெற வேண்டும்.

அணுவாகி, விதையாகி மற்றும் வேலாகி நின்ற சேயனை போல் நாமும் நித்திய பயிற்சியால் பயன் பெறலாம். அவ்வனுபூதி நிலையினை அடைந்த சித்த புருசர்கள் பரவெளியில் இறை அனுபவத்துடன் உளர். "காதற்ற ஊசியும் வாராது காண்" என்ற தெய்வ வாக்கும் எல்லோருக்கும் அதனை அடையும் வழியாக பட்டினத்தடிகள் மூலமாக கூறப்பெற்றது. அதையும் நினைவு கூர்ந்து அவ்வனுபவத்தையும் பெற வேண்டும்.

வேகாத கால் கொண்டு

போகாத புனலுடன்,

சாகா தலைபெற்று

சிகரமுளரி மலர்வித்து,

துரியம் விழித்துணர்ந்து,

ஆதிகருஅது பிரித்தீந்து

சிவபதம் தனை யாவரும் பெற்று வாழ்க.

- இறைமுடிமணி

man-fantasy-setting-practicing-yoga-mindful-meditation.jpg

©2024 by Tamil Siddha Yoga Research Centre

bottom of page